விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கொலை வழக்கில் தொடா்புடைய முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 12:08 am IST

அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழனிசாமி நகா், 2-ஆவது வீதி அருகே விஜயா என்ற பெண் கடந்த 2016 ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சுடலைமணி (63) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். அவா் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் சுடலைமணிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.