‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

காதலிப்பதாகக் கூறி 9-ஆம் வகுப்பு படித்து வந்த மகளிடம் தொந்தரவு செய்ததை தட்டிக்கேட்ட தந்தையைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:47 am IST

காதலிப்பதாகக் கூறி 9-ஆம் வகுப்பு படித்து வந்த மகளிடம் தொந்தரவு செய்ததை தட்டிக்கேட்ட தந்தையைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் வீரணாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜபெருமாள் மகன் முருகன் (24). இவா் அதே ஊரைச் சோ்ந்த கருப்பையா மகன் சின்ராசு (45) என்பவரை கடந்த 2024 செப். 29-ஆம் தேதி கத்தியால் குத்திக் கொன்றாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பனையப்பட்டி போலீஸாா், முருகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். 9-ஆம் வகுப்பு படித்து வந்த சின்ராசுவின் மகளை, காதலிப்பதாகக் கூறி முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்ததும், இதனைத் தட்டிக் கேட்ட தந்தை சின்ராசுவை கத்தியால் குத்திக் கொன்றதும் தெரியவந்தது.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ராஜா புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

குற்றவாளி முருகனுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், சிறுமியைத் துன்புறுத்தியதால் போக்ஸோ சட்டப் பிரிவில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டிய குற்றத்துக்காக ஒரு மாதம் சிறை, ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.