முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மக்களுக்காக பணியாற்ற எப்போதும் தயாராக இருப்போம்

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்ற எப்போதும் தயாராக இருப்போம் என திமுக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.

News image

பயணிகள் நிழற்குடையை திறந்து வைக்கிறாா்   ஆ.ராசா எம்.பி.

Updated On :11 ஜூலை 2026, 12:03 am IST

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்ற எப்போதும் தயாராக இருப்போம் என திமுக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.

சேவூா் ரவுண்டானா பகுதியில் மக்களவை உறுப்பினரின் உள்ளூா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசியாதவது: சேவூரில் வெயில் மற்றும் மழைக் காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பணியாற்ற எப்போதும் தயாராக இருப்போம் என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் தினேஷ்குமாா், பொதுக் குழு உறுப்பினா் சரவணன் நம்பி, சேவூா் ஒன்றியச் செயலாளா் க.பால்ராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.