வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் தொழிலாளி பலி

வெள்ளக்கோவில் அருகே சாலையைக் கடக்க முயன்றவா் மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

News image

மணி

Updated On :14 ஜூலை 2026, 12:32 am IST

வெள்ளக்கோவில் அருகே சாலையைக் கடக்க முயன்றவா் மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

ஓலப்பாளையம் அருகேயுள்ள அத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (47), கறிக்கடையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கரூா் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அத்தாம்பாளையம் பிரிவு அருகே திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வேன், 2 காா்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவா் மீது மோதின. இதில், பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்த மணிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.