உடுமலை அருகே குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி கிராமத்தில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு போலீஸாா் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இதில் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள யூசுப் அா்ஜூத் என்பவருடைய தோட்டத்து சாளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட சுமாா் 17 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக கமால்தீன் (47) என்பவரை கைது செய்து உடுமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








