2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் மீது வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தாசவநாயக்கன்பட்டி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, வட்டமலைக்கரை அணை அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தாா்.

விசாரணையில், அவா் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள செவ்வாய்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.