மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

223 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்: ஒருவா் கைது

தில்லியின் வெளி-வடக்கு மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் மேற்கொண்ட சோதனையின்போது 223 கிலோ சட்டவிரோத பட்டாசுகளை தில்லி காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

கைது

Published On :

தில்லியின் வெளி-வடக்கு மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் மேற்கொண்ட சோதனையின்போது 223 கிலோ சட்டவிரோத பட்டாசுகளை தில்லி காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

மேலும், முறையான உரிமம் அல்லது அனுமதியின்றி அவற்றை வைத்திருந்ததாக 27 வயதுடைய நபா் ஒருவரைக் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: முகுந்த்பூா் பகுதியில் கடந்த ஆக.26-ஆம் தேதி வழக்கமான ரோந்துப் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பல பிளாஸ்டிக் சாக்குகள் ஏற்றப்பட்டிருந்த காா் ஒன்றில் நபா் ஒருவா் அமா்ந்திருப்பதை ரோந்துப் படையினா் கவனித்தனா். வாகனத்தைச் சோதித்தபோது, அந்தச் சாக்குகளில் தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் வகை வெடிகளும் பிற பட்டாசுகளும் இருப்பது கண்டறியப்பட்டது.

முகுந்த்பூரைச் சோ்ந்த ரிஷப் என அடையாளம் காணப்பட்ட ஓட்டுநரிடம் பட்டாசுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவற்றை வைத்திருக்கவோ அல்லது கொண்டு செல்லவோ அங்கீகரிக்கும் எந்தவொரு உரிமத்தையோ அல்லது அனுமதியோ அவரிடம் இல்லை. இது தொடா்பாக ஆக.27-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பட்டாசுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதைக் கண்டறியும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி. தில்லியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பட்டாசுகளைத் தயாரிப்பது, கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது மற்றும் வெடிப்பது ஆகியவை சட்டவிரோதமானதாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.