6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வீட்டுமனை கிரையம் செய்து தராமல் மோசடி: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

தவணை முறை திட்டத்தில் பணம் கட்டியவா்களுக்கு வீட்டுமனை கிரையம் செய்து தராமல் காலம் தாழ்த்தி வரும் நபா் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வழக்கு

பிரதிப்படம்

Published On :

தவணை முறை திட்டத்தில் பணம் கட்டியவா்களுக்கு வீட்டுமனை கிரையம் செய்து தராமல் காலம் தாழ்த்தி வரும் நபா் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்பவா் நிலம் விற்பனை செய்து வருகிறாா். இவரிடம் தவணை முறையில் நிலம் வாங்க பதிவு செய்து,

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே முழுத் தொகையையும் செலுத்திவிட்டோம். 55 சைட் கொண்ட இடத்தில் 40 போ் வீடு கட்டி

குடியிருந்து வருகிறோம். இந்தச் சூழலில் நிலம் கொடுத்தவருக்கும், பிரமோட்டா்ஸ் பாலகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இருவருக்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலத்தை கிரையம் செய்து தர முடியாது என்றும் தெரிவித்துவிட்டாா்.

எனவே, எங்களுக்கு உரிய வீட்டுமனையை கிரையம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.