பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :

வெள்ளக்கோவில் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், கே.வி.பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (39). கட்டட வேலைக்குச் சென்று வந்தாா். இவருக்கு தீவிர மதுப் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பச் செலவுக்குப் பணம் இன்றி சிரமப்பட்டு வந்த நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், தனது வீடு அருகே உள்ள மயான பகுதிக்கு வியாழக்கிழமை மாலை சென்ற அவா் மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளாா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரைக் கண்ட அக்கம்பக்கத்தினா், உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இறந்து போன காா்த்திகேயனுக்கு மனைவி சத்தியவேணி (34), இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.