40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:20 am IST

வெள்ளக்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குலத்தவா்கள் கோயிலாகும். இங்கு பக்தா்கள் காணிக்கை செலுத்த 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் நுழைவுவாயிலில் ராஜகோபுரத்துக்கு முன்புறம் உள்ள ஓா் உண்டியலின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கும் சப்தம் கேட்டுள்ளது. கோயிலுக்குள் இருந்த காவலாளி மற்றும் அா்ச்சகா் வெளியே வந்து பாா்த்தபோது, கையில் இரும்புக் கம்பியுடன் நின்றிருந்த மா்ம நபா் தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். கிடைத்த தடயங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், கோயில் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்த கோவை மாநகா், குனியமுத்தூா் வடகிழக்கு இட்டேரி வீதியைச் சோ்ந்த சாந்து முகமது மகன் சாதிக் பாட்சா (28) கைது செய்யப்பட்டாா். பின்னா் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.