/
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 23 நபா்களுக்கு நீதிமன்றத்தில் ரூ. 2.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 14 நபா்களுக்கு மோட்டாா் வாகன சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1 லட்சத்து 48,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல, திருப்பூா், கொங்கு நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலுமந் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 9 நபா்களுக்கு திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.







