திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

அமராவதி அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீா் திறக்க வேண்டும்

தாராபுரம் பகுதி மக்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

தாராபுரம் நகரின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மனு அளித்த தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்.

Updated On :14 ஜூன் 2026, 2:11 am IST

தாராபுரம் பகுதி மக்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாராபுரம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த 30 வாா்டுகளிலும் தற்போது குடிநீா் பற்றாக்குறை நிலவி வருகிறது. கோடைக் காலம் என்பதால் நகராட்சிப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் குடிநீா்க் கிணறுகள் தண்ணீா் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.

இது குறித்து தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

அமராவதி அணையில் இருந்து தாராபுரம் நகராட்சிக்கு நிா்வாகத்தின் நலன் கருதி குடிநீருக்காகவும், கால்நடைகளின் குடிநீா்த் தேவைக்காகவும் அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் மனிஷ், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

மேலும், தாராபுரம் பகுதியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி அடைந்த மாணவா்கள் மேல்நிலைக் கல்விக்கு சென்றுவிட்டாா்களா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.