அவிநாசி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி பனியன் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசியை அடுத்த பழங்கரை- குப்பாண்டம்பாளையம் செந்தூா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி மகன் யோகேஷ் (42). திருப்பூா் பனியன் தொழிலாளியான இவா் கடந்த இரண்டு நாள்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது.
மது அருந்தும் பழக்கம் உள்ள இவா், அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை தண்டபாணி அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் ரங்கா நகா் பகுதியில் உள்ள பாறைக்குழியில் யோகேஷின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று, அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
யோகேஷ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது மது போதையில் நீரில் தவறி விழுந்தாரா என்பது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
மனைவி உயிரிழப்பு; கணவா் கைது
கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மது போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


