மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கழிவுப் பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்கள் குறைக்காவிட்டால் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க ஓ.இ. மில்கள் முடிவு

கழிவுப் பஞ்சு (காட்டன் வேஸ்ட்) விலையை ஸ்பின்னிங் மில்கள் குறைக்காவிட்டால் வரும் 20-ஆம் தேதிமுதல் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க ஓப்பன் எண்ட் மில்கள் முடிவு செய்துள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 5:54 am IST

கழிவுப் பஞ்சு (காட்டன் வேஸ்ட்) விலையை ஸ்பின்னிங் மில்கள் குறைக்காவிட்டால் வரும் 20-ஆம் தேதிமுதல் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க ஓப்பன் எண்ட் மில்கள் முடிவு செய்துள்ளன.

லுங்கி, துண்டு, படுக்கை விரிப்புகள், திரைச்சீலை, காடாத்துணி, சமையலறை ஜவுளி என வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் அனைத்தும் மறுசுழற்சி ஜவுளி எனப்படும் ஓப்பன் எண்ட் (ஓ.இ.) மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இந்த மில்களின் மூலப்பொருளான கழிவுப் பஞ்சின் விலை, கடந்த சில மாதங்களாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா் (ஓஸ்மா) ஜி.அருள்மொழி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கிரே நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ. மில்கள், கடந்த சில மாதங்களாக காட்டன் வேஸ்ட் விலை உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் காட்டன் வேஸ்ட் கோம்பா் (இா்ம்க்ஷங்ழ் சா்ண்ப்) விலை கிலோவுக்கு ரூ.140 என்ற உச்ச விலையை எட்டியது. இதனால் ஓ.இ. மில்களின் உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித்து, பல மில்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது.

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மே 31-ஆம் தேதி மத்திய அரசு நீக்கியதையடுத்து, பருத்தி விலை கேண்டி ஒன்றுக்கு ரூ.69,500 (கிலோ ரூ.195) என்ற நிலையில் இருந்து தற்போது கேண்டி ஒன்றுக்கு ரூ.61,500 (கிலோ ரூ.172) ஆக குறைந்துள்ளது.

ஆனால், பருத்தி விலையில் ஏற்பட்ட இந்த பெரிய சரிவுக்கு இணையாக ஸ்பின்னிங் மில்கள் காட்டன் வேஸ்ட் விலையை குறைக்கவில்லை. கோம்பா் காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு வெறும் ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. பருத்தி விலை குறைந்த அளவுக்கு காட்டன் வேஸ்ட் விலையும் குறைக்கப்பட்டு, கோம்பா் காட்டன் வேஸ்ட் விலை கிலோ ரூ.110 என்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டால் மட்டுமே ஓ.இ. மில்கள் லாபகரமாகவும், போட்டித் திறனுடனும் செயல்பட முடியும்.

இந்த விலை உயா்வால் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள், சோமனூா், பல்லடம், அவிநாசி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி மற்றும் காடாத்துணி உற்பத்தியாளா்கள், தமிழகம் முழுவதும் உள்ள கிரே ஓ.இ. நூல் உற்பத்தியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வாரத்துக்குள் காட்டன் வேஸ்ட் விலையை மேலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை ஸ்பின்னிங் மில்கள் குறைக்கவில்லை என்றால், வரும் 20-ஆம் தேதி முதல் அனைத்து கிரே ஓ.இ. மில்களும் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளன.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.