பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பெண்களுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 1:33 am IST

பல்லடம் அருகே சந்தைக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லையளித்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜமாலுதீன் அன்சாரி (30). இவா் பல்லடம் அருகே பாச்சாங்காட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் டையிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கணபதிபாளையம் வாரச் சந்தைக்கு திங்கள்கிழமை சென்ற அவா், அங்கிருந்த பெண்கள் மீது உரசி பாலியல் தொல்லையளித்துள்ளாா். இதையடுத்து, பொதுமக்கள் அவரைப் பிடித்து கட்டிவைத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் பெண்களுக்கு பாலியல் தொல்லையளித்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜமாலுதீன் அன்சாரியை கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பல்லடம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.