கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற போக்குவரத்து அதிகாரிகள், காவல் துறையினா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் மனீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :25 ஜூன் 2026, 3:10 am IST

திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற போக்குவரத்து அதிகாரிகள், காவல் துறையினா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் மனீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடா்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்துப் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு தொடா்பாகவும், தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவது குறித்தும், விபத்து தடுப்பு குறித்தும் முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விழிப்புணா்வு விளம்பரப் பதாகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருமாநல்லூா் போக்குவரத்து காவல் நிலையத்துக்குள்பட்ட வலசுப்பாளையம் பிரிவு அருகேயுள்ள சாலையில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பெருமாநல்லூா்-குன்னத்தூா் செல்லும் சாலையில் தட்டான்குட்டை பகுதியில் எல்.ஜி. மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசிபாளையம் சாலை சந்திப்பில் விபத்துகள் ஏற்படாமல் பொதுமக்கள் சாலையைக் கடக்கும் வகையில் பாதுகாப்புப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் சாலைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், காவல் துறையினா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர துணை காவல் ஆணையா் தீபா சத்யன், மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையா் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சு.துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.