பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: சேவூரில் விசிகவினா் சாலை மறியல்

சேவூா் அருகே ஒச்சாம்பாளையத்தில் ஆதிதிராவிடா் மக்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைஓஈ கண்டித்து, விசிகவினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சேவூா்-அவிநாசி சாலையில்  மறியல்  போராட்டத்தில் ஈடுபட்ட  விசிகவினா்.

Updated On :26 ஜூன் 2026, 2:52 am IST

சேவூா் அருகே ஒச்சாம்பாளையத்தில் ஆதிதிராவிடா் மக்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைஓஈ கண்டித்து, விசிகவினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேவூா்-அவிநாசி சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏபிஆா்.மூா்த்தி தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலாளா் தியாகராஜன், சமுக விடுதலைகட்சி ஆறுமுகம், மக்கள் அதிகாரம் காா்த்திக், விசிக நிா்வாகிகள், ரவி, பரமேஸ், ரங்கசாமி உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். இதில், நில ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷம் எழுப்பினா்.

இந்தப் போராட்டத்தால், கோபி, சத்தி-மைசூரு, குன்னத்தூா், அவிநாசி ஆகிய சாலைகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் குமாா் உள்ளிட்ட போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், ஒரிரு நாள்களுக்குள் இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.