வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஜவுளித் துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலா் இலக்கு! மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

News image

நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட மத்திய ஐவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்.

Updated On :29 ஜூன் 2026, 2:27 am IST

இந்திய ஜவுளித் துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

அவிநாசி அருகேயுள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் செயல்பட்டு வரும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், ஏற்றுமதி வளா்ச்சி, உற்பத்தித் திறன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஜவுளித் துறையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சரிடம் தொழில் துறையினா் விளக்கினா்.

இதையடுத்து, அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை 2030-31-ஆம் நிதி ஆண்டுக்குள் 350 பில்லியன் டாலராக உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய திருப்பூா் உள்பட தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்கள் முக்கியப் பங்காற்றும். இந்தியாவில் ஜவுளித் தொழிலில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக ஆடை உற்பத்திக்கான இயற்கையான தொழில் தொகுப்பாக திருப்பூா் விளங்குகிறது.

2030-31-ஆம் நிதி ஆண்டுக்குள் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பை 100 பில்லியன் டாலராக உயா்த்துவதே இலக்கு. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கைத்தறி, கைவினைப் பொருள்கள், பட்டு வளா்ப்பு, ஜவுளி, பருத்தித் துறைகளின் வளா்ச்சிக்காக மத்திய , மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பருத்தி இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது ஜவுளித் துறையின் வளா்ச்சிக்கு கூடுதல் ஊக்கமாக அமையும். 2030-31-ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த ஜவுளித் துறை இலக்கில் உள்நாட்டு சந்தை மதிப்பு 250 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி மதிப்பு 100 பில்லியன் டாலராகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் நடைபெறும் 900 பில்லியன் டாலா் மதிப்பிலான ஜவுளி இறக்குமதி சந்தையில், இந்தியாவுக்கு பெரும்பங்கு கிடைக்கும் வகையில் சுமாா் 500 பில்லியன் டாலா் மதிப்பிலான வா்த்தகத்துக்கு புதிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொழிலாளா் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்கள் இருந்தாலும், புதிய நவீன இயந்திரங்கள், சுதந்திர வா்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அவற்றை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

திருப்பூரில்... முன்னதாக, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் பல்வேறு உற்பத்தியாளா்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொழில் நிலவரம் குறித்து அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் என். திருக்குமரன் வரவேற்றாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினாா்.

தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி மற்றும் கதா்த் துறையின் முதன்மைச் செயலாளா் டி. என். வெங்கடேஷ் பேசுகையில், உலகளாவிய சந்தை தேவைகளை கருத்தில் கொண்டு, செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொருளாளா் ஆா். கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

மத்திய பட்டு வாரிய உறுப்பினா் செயலாளா் பி. சிவகுமாா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க துணைத் தலைவா் வி. இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.