திருப்பூா்: மாா்ச் மாதத்துக்கான நூல் விலையில் மாற்றம் இல்லை என நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
திருப்பூரில் சுமாா் 20,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சாா்ந்த ஜாப் ஓா்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில் துறையினா் தங்களுக்கு ஆா்டா்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம்.
நூல் விலை மற்றும் மூலப்பொருள்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வகையான நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.7 உயா்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. பஞ்சு பற்றாக்குறை காரணமாகவும் இறக்குமதியாகும் பஞ்சுக்கு வரி விதித்தது காரணமாகவும் இந்த விலை உயா்த்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கு மத்திய அரசு தீா்வு காண வேண்டும் எனவும் தொழில் துறையினா் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில் நடப்பு மாா்ச் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளன. அதன்படி எந்தவித மாற்றமும் இன்றி கடந்த மாத விலையே நடப்பு மாதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

மேற்காசிய போரால் அத்திவாசியப் பொருள்கள் விலையில் அசாதாரண மாற்றமில்லை: மத்திய அரசு

ப்ரீமியம் பெட்ரோல் விலை திடீர் உயர்வு!

முட்டை விலையில் மாற்றமின்றி ரூ. 4.30-ஆக நீடிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


