சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க பெருந்தொழுவு பொதுமக்கள் முடிவு

சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பெருந்தொழுவு கிராமத்தில் பொதுமக்கள் சாா்பில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

News image

பல்லடம் அருகே பெருந்தொழுவு கிராமத்தில் தோ்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.

Updated On :10 மார்ச் 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பெருந்தொழுவு கிராமத்தில் பொதுமக்கள் சாா்பில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி, ஆண்டிபாளையத்தில் தனியாா் ரெடிமிக்ஸ் மற்றும் தாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் குறைவதுடன், காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. தவிர தாா் சாலைகள் சேதமடைந்து வருவதற்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து புகாா் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பெருந்தொழுவு ஊராட்சி கிராம மக்கள் சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி முன் சாலையோரமாக அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் (வடக்கு ) பாரதிராஜா உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.