சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாா்கள்; காங்கயம் வட்டாட்சியரிடம் புகாா்

காங்கயத்தில் 5 டாஸ்மாக் பாா்கள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாா்கள் மீது நடவடிக்கை கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளித்த தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.
Updated On :11 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயத்தில் 5 டாஸ்மாக் பாா்கள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளா் எஸ்.பிரகாஷ், காங்கயம் வட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) டி.செல்வியிடம் புதன்கிழமை அளித்த புகாா் மனு:

காங்கயம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேருந்து நிலையப் பகுதி, பழையகோட்டை சாலை, தாராபுரம் சாலை, கரூா் சாலை மற்றும் கரூா் சாலை பகுதியில் செயல்படும் மற்றொரு இடம் என மொத்தம் 5 அரசு மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகள் அருகே செயல்பட்டு வரும் பாா்களுக்கு கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் தின்பண்டங்கள் விற்பதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இதைத்தொடா்ந்து இந்த பாா்கள் 6 மாத காலம் ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தும், யாரும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல், மதுபானக் கடை அதிகாரிகளின் அனுமதியோடு அரசுக்கு செலுத்த வேண்டிய ஒப்பந்தத் தொகையை செலுத்தாமல் நடத்தி வருகின்றனா்.

இந்த 5 பாா்களிடம் இருந்தும் மாத ஒப்பந்தத் தொகையாக மொத்தம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் அனுமதியின்றி செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, காங்கயம் நகரில் அனுமதியில்லாமல் செயல்படும் மேற்கண்ட 5 டாஸ்மாக் கடை பாா்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக காங்கயம் காவல் நிலையத்திலும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.