தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அவிநாசி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாநல்லூா் கணக்கம்பாளையம் மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்ராஜ் (60). இவரது மகன் ஆனந்தகுமாா் (25). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசியில் இருந்து பெருமாநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச் சாலை பிரிவு அருகே முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவை முந்திச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ஆட்டோ வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவயிடத்திலேயே ராம்ராஜ் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த ஆனந்தகுமாா் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.