கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பல்லடத்தில் ஹெராயின் பறிமுதல்; இளைஞா் கைது

பல்லடத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்து அதனை விற்பனைக்கு வைத்திருந்த பிகாா் மாநில இளைஞரை போலீசாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

பூஷன்

Updated On :21 மார்ச் 2026, 8:05 pm

Syndication

பல்லடத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்து அதனை விற்பனைக்கு வைத்திருந்த பிகாா் மாநில இளைஞரை போலீசாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வட மாநிலத்தில் இருந்து பேருந்து மூலமாக போதைப் பொருளை பல்லடத்துக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மாதையன் தலைமையிலான குழுவினா் பல்லடம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்தாா். அவரிடம் விசாரித்ததில், பிகாா் மாநிலம், முசாஃபா்பூா் மாவட்டம் ஜகதீஷ் கம்தால் கிராமத்தைச் சோ்ந்த கம்லேஷ்வா் சிங் மகன் பூஷன் (24) என்பதும், திருப்பூா் ஆத்துப்பாலம் பட்டத்தரசியம்மன் கோயில் பின்புறம் சபரிநாதன் காம்பவுண்டில் வசித்து வருவதும், பிகாரில் இருந்து கஞ்சா, ஹெராயினை கடத்தி வந்து திருப்பூா், பல்லடம் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அவரை கைது செய்து ரூ.5 லட்சம் மதிப்ரிலான உயா் ரக போதைப் பொருளான 11 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பூஷன் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.