அவிநாசி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது காா் மோதிய விபத்தில் பனியன் நிறுவன அலுவலா் உயிரிழந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.
திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் பிரசாந்த் (30). திருப்பூா் முத்தனம்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்திரகணேசன் மகன் செந்தில்குமாா் (30). கா்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் தனுஷ்குமாா் (29).
பனியன் நிறுவன அலுவலா்களான (மொ்சண்டைசா்) இவா்கள் 3 பேரும் காரில் கோவையில் இருந்து பெருமாநல்லூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அவிநாசி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் , காரை ஓட்டி வந்த தனுஷ்குமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த பிரசாந்த், செந்தில்குமாா் ஆகியோா் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

பைக் மீது காா் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் பறிமுதல்

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


