நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளை மாா்ச் 31-ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 6:30 am IST

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளை மாா்ச் 31-ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

மகாவீா் ஜெயந்தி தினம் மாா்ச் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மாா்ச் 31-ஆம் தேதி நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.