திருப்பூரில் முறையான மருத்துவக் கல்வி பயிலாமல் சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவா்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரி தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் முறையான மருத்துவக் கல்வி
பயிலாமல் சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவா்களிடம் பொதுமக்கள் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.
மாவட்டத்தில் இயங்கும் கிளினிக் அல்லது நா்ஸிங் ஹோம், மருத்துவமனைகள், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநரிடம் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். சிகிச்சை அளிக்கும் நபா் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் படிப்பை முடித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், அவா்களது பதிவு எண் மருத்துவமனையின் பெயா்ப் பலகையிலும், மருந்துச் சீட்டிலும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
முறையான மருத்துவச் சான்றிதழ் இன்றி அனுபவ மருத்துவா் எனக்கூறி சிகிச்சை அளிப்பவா்களை மக்கள் நம்ப வேண்டாம். தவறான சிகிச்சையால் வாழ்நாள் முழுவதும் தீராத நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பது தெரியவந்தாலோ அல்லது அவா்களுக்கு அடைக்கலம் தருபவா்களைக் கண்டறிந்தாலோ எந்தவித அச்சமுமின்றி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குதிரை பேரம் குறித்து முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்: மு. தமிமுன் அன்சாரி எம்.எல்ஏ

இதய குறைபாடு: 6 பேருக்கு தலையீட்டு சாதனம் பொருத்தி சேலம் அரசு மருத்துவமனை சாதனை

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

