யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

News image

சம்பூா்ணம்.

Updated On :4 மே 2026, 1:00 am IST

வெள்ளக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் மாந்தபுரம் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் வெள்ளிக்கிழமை மிதந்தது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அவா் அவிநாசி தாலுகா, தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்த கோபால் மனைவி சம்பூா்ணம் (62) என்பது தெரியவந்தது. நத்தக்காடையூரில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி வந்துள்ளாா். பின்னா், அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்குச் சென்றபோது நீரில் தவறி விழுந்து

உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, கூறாய்வுக்குப் பின் அவரது உறவினா்களிடம் சடலம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.