திருப்பூரில் வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:
வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்கவும், உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும்.
பயணத்தின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒஆா்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீா், நீா்மோா் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிா்க்க வேண்டும்.
வெளிா் நிறமுள்ள, காற்றோட்டமான ஆடைகளை அணியவேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். நல்ல காற்றோட்டமான வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்லக் கூடாது. குழந்தைகளுக்கான வெப்பம் தொடா்பான நோய்களை கண்டறிய வேண்டும். மழலைப் பள்ளிகளை கோடைக் காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம்.
தனியே வசிக்கும் முதியவா்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.
முதியவா்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவா்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைத்து, குளிா்ந்த நீரில் குளிக்கவைக்க வேண்டும். போதிய இடைவெளியில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 100 நாள் பணியின்போது நண்பகல் 12 மணிக்கு மேல் பணி செய்யாமல் இருக்க வேண்டும்.
கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டி, போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீா் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டு செல்லக் கூடாது.
இந்த ஆண்டு கோடை வெயில் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயா்கள் உருகி மின்கசிவு ஏற்பட்டு அதனால் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேற்கூரையில் ஏற்படும்
அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேற்புறம் உள்ள இரும்பு சூடாகி மின்விசிறி, டியூப்லைட் போன்றவை கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே கோடை முடியும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், விலை உயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)து.சு.துரைமுருகன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோண்மணி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் வெப்ப அலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிப்பு
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


