ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தவெகவின் தோ்தல் வாக்குறுதியான 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

தோ்தல் வாக்குறுதியான விசைத்தறி தொழிலுக்கு 1500 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற விசைத்தறி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்றோா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தோ்தல் வாக்குறுதியான விசைத்தறி தொழிலுக்கு 1500 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற விசைத்தறி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சிஐடியூ தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளா் மாநில சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் அவிநாசி சிஐடியூ அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் முத்துசாமி, மாநிலப் பொருளாளா் அசோகன், மாநிலத் துணைத் தலைவா் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது, விசைத்தறி தொழிலுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தாா். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் மத்திய அரசால் விசைத்தறி தொழில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து நழிவுற்ற நிலையில் இருந்து வருகிறது. இதில் பல லட்ச தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இத்தொழிலை பாதுகாக்கவும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தொழிலை நல்ல நிலையில் எடுத்துச் செல்ல 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கி தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.