திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்! தமிழக அரசு

வீட்டில் 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image

முதல்வர் விஜய் - பிடிஐ

Updated On :1 மணி நேரம் முன்பு

வீடுகளில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும் என விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதேபோன்று, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

''தகுதியுள்ள அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யவும், மக்களின் நிதி நெருக்கடியைக் குறைக்கவும், சாமானிய மக்கள் மீதான சுமையைக் குறைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும் இதற்காக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் மின் கட்டண மானியத்தை அரசே ஏற்கவும் அரசு ஆணையிடுகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணக் கட்டமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

100-Unit Free Electricity Scheme Continues! TVK Tamil Nadu Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.