அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

200 யூனிட் மின்சாரம் இலவசம்! விஜய் முதல் கையொப்பம்!

மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய்யின் முதல் கையொப்பம்!

News image

முக்கிய கோப்புகளில் முதல்வர் விஜய் கையொப்பம்! - யூடியூப் நேரலையிலிருந்து...

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சென்னை : மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் தமிழக முதல்வர் விஜய் கையொப்பமிட்டார்.

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். வீடுகளில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் நுகர்வோருக்கு, 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதியதொரு திட்டத்தையும் தொடங்கி வைத்து அதற்கான ஆணையில் அவர் கையொப்பமிட்டார். போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்புப் படை திட்டம் என்ற கோப்பிலும் கையொப்பமிட்டார். அதனைத்தொடர்ந்து, மக்களிடையே உரையாற்றினார்.

Summary

Chief Minister Vijay Signs Important Files in the Presence of the People

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.