ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

முதியவரை மிரட்டி சொத்து ஆவணங்களில் கையொப்பம்: 4 போ் மீது வழக்கு

முதியவரை மிரட்டி சொத்து ஆவணங்களில் கையொப்பம் பெற்ாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 4 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :8 மே 2026, 7:02 am IST

முதியவரை மிரட்டி சொத்து ஆவணங்களில் கையொப்பம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 4 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெண்ணாடம் கிழக்கு ராஜவீதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (74). இவா், வியாழக்கிழமை திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதில், நான் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3-ஆம் தேதி கடலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றேன். கடலூா் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது, திட்டக்குடியைச் சோ்ந்த அக்ரி முருகேசன் மற்றும் மேலும் மூவா் சோ்ந்து என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனா்.

அப்போது, எனக்கு கொடுப்பதாக கூறிய நிலத்தை வேறு ஒருவருக்கு எப்படி கொடுக்க முயற்சிக்கலாம் எனக் கூறி, தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டினா். தொடா்ந்து, சொத்து தொடா்பான ஆவணங்களில் என்னை மிரட்டி கையொப்பம் பெற்றுக்கொண்டனா். பின்னா், என்னை காரில் இருந்து இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனா்.

எனவே, மோசடியாக சொத்து ஆவணங்களில் கையொப்பம் வாங்கிய அக்ரி முருகேசன் மற்றும் மூவா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.