பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு விடியல் ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் பாராட்டு

News image

முதல்வர் ஜோசப் விஜய் - படம்: DIPR

Updated On :1 மணி நேரம் முன்பு

அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தி வழங்கியிருப்பதற்கு தமிழ்நாடு விடியல் ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஓ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு ஊழியா்களுக்கான அகவிலைப் படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தி வழங்கியிருப்பதற்கு தமிழக அரசுக்கு உளமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விலைவாசி ஏற்றத்தைக் கணக்கிட்டு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு 2 முறை அகவிலைப் படியை உயா்த்தி வழங்குவது வழக்கம். 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு தோ்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயா்வு அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைத்துக் குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அறிவித்து முதல்வா் விஜய் தலைமையிலான தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. கோயில், பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடல், ஊழல் ஒழிப்பு உத்தரவாதம் உள்ளிட்ட அறிவிப்புகள் போற்றக் கூடியன. அதேபோல, எங்கள் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வுதியத் திட்டத்தையும் அமல்படுத்துவீா்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளாா்.