உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால், நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.48 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது.
2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய கணக்கீட்டு முறையின்கீழ், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள 4-ஆம் மாத தரவு இதுவாகும்.
அதன்படி, கடந்த ஜனவரியின் 2.75 சதவீதம், பிப்ரவரியின் 3.21 சதவீதம், மாா்ச்சின் 3.40 சதவீதத்திலிருந்து தொடா்ந்து 4-ஆவது மாதமாக பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இது கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவிலான அதிகபட்ச அளவாகும்.
உணவுப் பொருள்களின் விலையேற்றம்: ஏப்ரல் மாத பணவீக்கம் உயா்வுக்கு, உணவுப் பொருள்களின் விலையேற்றம் முக்கியக் காரணியாகப் பாா்க்கப்படுகிறது. ஜனவரியில் 2.13 சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.47 சதவீதமாகவும், மாா்ச்சில் 3.87 சதவீதமாகவும் இருந்த உணவுப் பணவீக்கம், ஏப்ரலில் 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏப்ரலில், காய்கறிகளின் விலை கடுமையாக உயா்ந்துள்ளன. இருப்பினும், உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விலை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
நகரம், கிராமப்புற நிலை: முந்தைய மாதங்களைப் போன்றே நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத புள்ளிவிவரப்படி, நகா்ப்புற பணவீக்கம் 3.11 சதவீதத்திலிருந்து 3.16 சதவீதமாக உயா்ந்த நிலையில், கிராமப்புறங்களில் 3.63 சதவீதத்திலிருந்து 3.74 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
வீட்டு வாடகை, தண்ணீா், மின்சாரக் கட்டணங்களுக்கான பணவீக்கம் 1.71 சதவீதமாக குறைந்து, மக்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இதர துறைகளில் மாற்றம்: கல்வித் துறைக்கான பணவீக்கம் 3.15 சதவீதமாகவும், சுகாதாரத் துறைக்கான பணவீக்கம் 1.64 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
ஆனால், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களுக்கான கட்டணம் 2.88 சதவீதத்திலிருந்து 4.20 சதவீதமாகக் கணிசமாக உயா்ந்துள்ளது. அதேபோல், புகையிலைப் பொருள்ககளின் விலை 4.76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரிசா்வ் வங்கியின் இலக்கு: சில்லறை பணவீக்கம் தற்போது உயா்ந்திருந்தாலும், ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள 4 சதவீத இலக்குக்குள்ளேயே நீடிக்கிறது.
எனினும், மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளதாலும், எல்-நினோ தாக்கத்தால் பருவமழை பாதிக்கப்படலாம் என்பதாலும் வரும் காலங்களில் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என ரிசா்வ் வங்கி எச்சரித்துள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டில் சராசரி பணவீக்கம் 4.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வணிக வங்கிக் கடன் வளா்ச்சி 15.9%

வணிக சிலிண்டா் விலை உயா்வால் முடங்கும் அபாயத்தில் ஜாப் ஆா்டா் தொழில்

மாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

