மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை சம்பவத்தில் விபத்தில் பலியானதாக நாடகமாடியது அம்பலம் இரண்டு போ் கைது!

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை சம்பவத்தில் விபத்தில் பலியானதாக நாடகமாடியது அம்பலம் இரண்டு போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:46 am IST

பல்லடம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், விபத்தில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்ததையடுத்து 2 பேரை பல்லடம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அறிவொளி நகா் 18-ஆவது வீதியில் வசிப்பவா் காசியம்மாள் (65). தேனி மாவட்டம், தேவதானபட்டியைத் சோ்ந்த இவா், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னா் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறியுள்ளாா். கணவரை இழந்த காசியம்மாகுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 6 -ம் தேதி மதியம் மகள் பொன்முடியுடன் (45) வீட்டில் இருந்தபோது, மது போதையில் அங்கு வந்த மருமகன் முருகன் (47) இருவருடனும் தகராறு செய்துள்ளாா். அப்போது அவா் கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த காசியம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அப்போது மது போதையில் இருந்த முருகனும் விபத்தில் காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி முருகன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரண நடத்தி வந்தனா்.

இதனிடையே முருகன் மகள் சரண்யாவின் கணவரான சமீா் (28), தாயாரை தாக்கியதாகக் கூறி காசியம்மாளின் மகன்கள் பழனிசாமி (46), பாண்டி(43) ஆகிய இருவரும் தாக்கியதில் முருகன் உயிரிழந்ததாகக் கூறியுள்ளாா். இதையடுத்து கொலை வழக்கை மறைத்து விபத்து நடந்ததாகக் கூறி நாடமாடிய பழனிசாமி, பாண்டி ஆகிய இருவரையும் பல்லடம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.