இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் தகராறு: தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கட்டட வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :28 மே 2026, 1:21 am IST

வெள்ளக்கோவில் அருகே கட்டட வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

ஈரோடு மாநகா், திண்டல் புதுக்காலனியைச் சோ்ந்தவா்கள் ஹுசைன் ஷா மகன்கள் அலிகான் (24), தில்சா் (22). இருவரும் லேசா் கட்டிங் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் இருவரும் தங்களுடைய மாமா ஷாரிக் என்பவருடன், வெள்ளக்கோவில் அருகே முத்தூா் மேட்டாங்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்த அா்ஜுன்குமாா் என்பவருடைய கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றுள்ளனா். இரவு 10 மணி வரை பணி முடியாததால், அங்கேயே தங்கி வேலையை முடித்துவிட்டு செல்லுமாறு கட்டட உரிமையாளா் கூறியுள்ளாா்.

ஆனால், அங்கு தங்க போதிய வசதிகள் இல்லாததால், 12 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வெள்ளக்கோவில் சென்றுவிட்டு காலை வருவதாகக் கூறியுள்ளனா். வாங்கிய பணத்தை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிடுவீா்கள் என உரிமையாளா்கள் தரப்பில் கூறியதால் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இவா்களை அா்ஜுன்குமாா் தரப்பினா் அடித்ததுடன் கற்களாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அஞ்சி ஓடியபோது அருகில் இருந்த கிணற்றில் தில்சா் விழுந்துவிட்டாா். இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி பாா்த்தபோது தில்சா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.