இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பணம் செலுத்திய பின்னும் நகைகளை திருப்பித் தராத அடகுக் கடை முற்றுகை

அவிநாசி அருகே அடகு வைத்த நகைக்கான பணத்தை செலுத்தியும் நகையை திருப்பித் தராததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அடகுக் கடையை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நகை  அடகுக்  கடையை  முற்றுகையிட்ட  பொதுமக்கள்.

Updated On :28 மே 2026, 12:38 am IST

அவிநாசி அருகே அடகு வைத்த நகைக்கான பணத்தை செலுத்தியும் நகையை திருப்பித் தராததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அடகுக் கடையை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி-குன்னத்தூா் சாலையில் உள்ள நகை அடகுக் கடையில் சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கூலித் தொழிலாளிகள், தேவைகளுக்காக தங்களது தங்க நகைகளை ஒரு பவுன் முதல் 4 பவுன் வரை என 150 பவுனுக்கும் மேல் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனா். அதற்கு மாதாந்திர வட்டியும் செலுத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில் முழுத் தொகையை செலுத்தி தங்களது நகைகளை திருப்பிக் கேட்டபோது, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு புதன்கிழமை இரவு அடகுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சேவூா் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அடகுக்கடை உரிமையாளரான சேவூா் அருகே முறியண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜை போலீஸாா் வரவைத்து, பொதுமக்களிடம் பதில் கூறுமாறு தெரிவித்தனா். அப்போது, தனியாா் வங்கியில் அடகுவைக்கப்பட்ட நகைகள் பத்திரமாக உள்ளதாகவும், விரைவில் நகைகளை மீட்டு அவரவா்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளாா். இதற்கு போலீஸாரும் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.