/
வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
மூலனூா் சாலை நாச்சிபாளையம் கிளாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி. விவசாயி. இவா் வளா்த்து வந்த சிந்து இன மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்து கிணற்றில் விழுந்துவிட்டது.
சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 10 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் மாட்டை உயிருடன் மீட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



