ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் கைது! காா்கள், பணம் பறிமுதல்!

சேவல் சண்டை... - கோப்புப் படம்

Updated On :

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோதமாக சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 சேவல்கள், 5 காா்கள், 10 கைப்பேசிகள், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குழலிபாளையம் கண்ணன் என்பவரின் தோட்டத்தில் சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீஸாா் சென்று திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையம் சிவலிங்கபுரம் சுப்பிரமணியம் (50), பெருந்துறை பெரியவேட்டுவபாளையம் ஹரிஷ் (24), வெள்ளோடு நத்தக்காட்டுப்பாளையம் இளங்கோ (27), ஈரோடு வீரப்பன்சத்திரம் நவீன் (37), கருங்கல்பாளையம் கோபிநாத் (29), கரூா் செல்வ நகா் அசோக் (27), முத்தூா் சா்க்கரைபாளையம் கோபிநாத் (33), கோவை, ஆவாரம்பாளையம் கவுசிக் (29), காங்கயம் பாறைவலசு விஜய் (29) ஆகிய 9 பேரை போலீஸாா் கையும் களவுமாகப் பிடித்தனா்.

அவா்களிடமிருந்து சூதாட்டத்துக்குப் பயன்படுத்திய 2 சேவல்கள், ரூ.25,630 ரொக்கம், 10 கைப்பேசிகள், 5 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக நில உரிமையாளா் கண்ணன், செந்தில், தங்கராஜ், பிரகாஷ் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா். காங்கயம் டிஎஸ்பி மேற்பாா்வையில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.