போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி: 2 போ் கைது
கைது - கோப்புப் படம்
திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கொத்தங்குளத்தைச் சோ்ந்தவா் அஸ்வின் ரங்கேஷ், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது உறவினா் மணிகண்டன், இவா் சுமைத் தூக்கும் பணி செய்து வருகிறாா்.
இந்நிலையில், இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் தங்க நகைககள் எனக்கூறி போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் கடன் பெற்றுள்ளனா்.
இதையடுத்து, திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மற்றொரு அடகு நிறுவனத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவரை கடந்த வாரம் அணுகியுள்ளனா். அப்போது, தங்களுக்குச் சொந்தமான நகையை வேறொரு நிறுவனத்தில் ரூ.3.50 லட்சத்துக்கு அடகு வைத்துள்ளோம். அதை மீட்டு உங்களது நிறுவனத்தில் விற்பனை செய்ய உள்ளோம், அதற்கு ரூ.3.50 லட்சம் தேவை எனக் கூறியுள்ளனா்.
இதை நம்பிய கிருஷ்ணமூா்த்தி, சம்பந்தப்பட்ட அடகு கடைக்கு அவா்களுடன் சென்று ரூ.3.50 லட்சத்தை செலுத்தி அடகில் இருந்த நகைகளை மீட்டுள்ளாா். ஏற்கெனவே அடகு வைத்திருந்ததால் அவை தங்கம்தான் என நினைத்து சோதித்து பாா்க்காமல் தனது நிறுவனத்துக்கு கிருஷ்ணமூா்த்தி வாங்கி வந்துள்ளாா்.
பின்னா், அந்த நகைகளை சோதனை மேற்கொண்டபோது, அவை தங்க மூலம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்து. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான அஸ்வின் ரங்கேஷ், மணிகண்டன் ஆகியோரை தேடி வந்த நிலையில் திங்கள்கிழமை கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த ரூ.1.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

