வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்த வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது
வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா், கோபிநாதம்பட்டி, மொரப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளில் போலியாக தங்க நகைகள் செய்து அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடா்பாக கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த மோசடி தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள உத்தரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விஷ்வகோபால் மகன் லோகேஷ் (28) என்பவா் கடந்த 11 மாதங்களாக தலைமறைவாக இருந்தாா்.
இந்த நிலையில், கோபிநாதம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் முனிராஜ் தலைமையில், தலைமைக் காவலா் இளம்பரிதி உள்ளிட்ட போலீஸாா், தலைமறைவாக இருந்தவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஒசூா் பகுதியில் பதுங்கியிருந்த லோகேஷை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

