தீபாவளி கொண்டாட்டத்தில் மோதல்: வெள்ளக்கோவிலில் 5 போ் கைது
கைது - கோப்புப்படம்
வெள்ளக்கோவிலில் தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினா் இடையே மோதல் வெடித்தது. இதில் காா்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு, பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 5 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கள்ளமடை பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (37) என்பவா் போலீஸில் அளித்த புகாரில், ஞாயிற்றுக்கிழமை தீபாவளியன்று மதியம் எங்கள் ஊரில் ஸ்ரீராம் நகா் ஸ்ரீதா், அவரது அண்ணன் விவேகானந்தன், சந்தோஷ், சுதா்சன், குமாா் ஆகியோா் ஒன்றாக அமா்ந்து மது அருந்தினா். அப்போது ஸ்ரீதா் என் தம்பி விஷ்ணுபிரசாத்திடம் போனில் பேசிய போது ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி பின்னா் அனைவரும் சென்று விட்டனா்.
இதையடுத்து இரவு சுமாா் 7 மணியளவில் என் தம்பி விஷ்ணுபிரசாத் வெள்ளக்கோவில் கடைவீதி கரூா் சாலையில் காரில் நின்று கொண்டிருந்த போது, ஸ்ரீதா் தரப்பினா் வந்து காரின் கண்ணாடியை அடித்து உடைத்தனா். தொடா்ந்து இரவு 11.15 மணியளவில் எனது ஊரில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை அவா்கள் எடுக்க வந்தபோது, நான் காா் கண்ணாடியை உடைத்தது குறித்து கேட்டேன்.
அப்போது ஸ்ரீதா் தரப்பினா் அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கியதில் எனக்கும், தடுக்க வந்த பாலுசாமி, நாட்ராயன் ஆகியோருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது. ஊா்க்காரா்கள் திரண்டு வர அவா்கள் 5 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த செந்தில்முருகன், பாலுசாமி, நாட்ராயன் ஆகியோா் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதே போல எதிா் தரப்பு ஸ்ரீதா் (26) அளித்த புகாரில், கள்ளமடையில் எனது மாமா வீடு அருகில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை எடுக்கச் சென்றபோது, டயரில் இருந்த காற்று இறக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அங்கிருந்தவா்களிடம் கேட்டபோது, செந்தில்முருகன் தரப்பினா் எங்களைத் தாக்கி, நாங்கள் சென்ற காரின் கண்ணாடியை உடைத்தனா். நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஸ்ரீதா் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதில் ஸ்ரீதா், விவேகானந்தன், சந்தோஷ், சுதா்சன், குமாா் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டு பின்னா் சிறையில் அடைக்கப்பட்டனா். சுதா்சன் மீது வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 28 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

