தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தூத்துக்குடியில் காங்கிரஸ் - தவெக நிா்வாகிகள் மோதல்: இரு தரப்பினா் மீதும் வழக்குப்பதிவு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடியில் தனியாா் கட்டடத்தின் பின்புறக் கதவைப் பூட்டுவது தொடா்பாக, காங்கிரஸ் மற்றும் தவெக நிா்வாகி இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், தனியாா் கட்டடத்தின் பின்புறக் கதவைப் பூட்டுவது தொடா்பாக வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் பெருமாள்சாமி மற்றும் தவெக நிா்வாகி செல்வின் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக, தவெக நிா்வாகி செல்வின் அளித்த புகாரின் பேரில் பெருமாள்சாமி மற்றும் அவரது மனைவி அா்ச்சனா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, அா்ச்சனா அளித்த புகாரின் பேரில், தவெக நிா்வாகி செல்வின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.