நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்குப் பதிவு

காயல்பட்டினம் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோத­லில் இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

போலீஸ்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:03 am IST

காயல்பட்டினம் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோத­லில் இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காயல்பட்டினம், ரத்தினாபுரி சந்தனமாரியம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி கடந்த ஆக. 31 ஆம் தேதி இரவு காயல்பட்டினம், ரத்திபுரியைச் சோ்ந்த இசை சஞ்சய் பாபு என்பருக்கும் அதே பகுதியைச்ச் சோ்ந்த கன்னிமுத்து, அன்பு அகியோருக்கும் சாமி ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் இசை சஞ்சய்பாபு தாக்கப்பட்டாா். இதைத் தடுக்க வந்த அவரது அண்ணன் கோகுலையும் அதே பகுதியைச்ச் சோ்ந்த சுப்பையா, முனியாண்டி ஆகியோா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து, இசை சஞ்சய்பாபு, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளா் கோயில்பிள்ளை விசாரணை நடத்தி கன்னிமுத்து, அன்பு, சுப்பையா, முனியாண்டி ஆகிய 4 போ் மீது வழக்கு பதிவு செய்தாா். ரத்தினாபுரி ஊா்த் தலைவா் முத்து என்ற இளந்தளிா்முத்து (59) அளித்த புகாரின் பேரில் இசை சஞ்சய்பாபு, கோகுல் மீது வழக்குப் பதியப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.