மின் திருட்டு கண்டறியப்பட்டு அபராதம் வசூலிக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
திருமுருகன்பூண்டியில் மின் திருட்டு கண்டறியப்பட்டு ரூ.7.58 லட்சம் அபராதம் விதித்தும், தொகையை வசூலிக்காத மின் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமுருகன்பூண்டியில் மின் திருட்டு கண்டறியப்பட்டு ரூ.7.58 லட்சம் அபராதம் விதித்தும், தொகையை வசூலிக்காத மின் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத் தலைவா் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் - அவிநாசி பிரதான சாலை திருமுருகன் பூண்டி மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட தனியாா் மருத்துவமனை வணிக வளாகத்தில், விதிகளுக்குப் புறம்பாக மின் திருட்டு முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பா் மாதம் மின்வாரிய அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டு, ரூ.7,58,433 தற்காலிக அபராதம் விதிக்கப்பட்டது. மின் திருட்டு கண்டறியப்பட்டு, 30 நாள்களுக்குள் அபராதத் தொகையை வசூலித்து, மின் இணைப்பை நிரந்தரமாகத் துண்டித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும் என்பது விதியாகும். இருப்பினும் 60 நாள்களுக்கும் மேலாகியும், வணிக வளாகத்தின் மின் இணைப்பை துண்டிக்காமலும், அபராதத் தொகையான ரூ.7,58,433 வசூலிக்காமலும் மின்வாரியத்தினா் உள்ளனா். ஆகவே, திருமுருகன்பூண்டி மின்வாரிய அதிகாரிகள், வருவாய் பிரிவு அலுவலா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

