இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்த லாரி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்த லாரி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் தீத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் கிட்டான் மகன் திருமூா்த்தி (54). விறகு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த செப். 4-ஆம் தேதி அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளாா்.

வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்த பேருந்தை, அதன் ஓட்டுநா் முத்துவேல் நகராட்சி கட்டணக் கழிப்பிடம் அருகே நிறுத்தியுள்ளாா். அப்போது திருமூா்த்தி பேருந்தின் பின்பக்கப் படிக்கட்டு வழியாக இறங்க முயன்றபோது, ஓட்டுநா் பேருந்தை திடீரென முன்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த திருமூா்த்திக்கு பின்னந்தலை மற்றும் கை மூட்டுகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். அதன்பின் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமூா்த்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, உயிரிழந்த திருமூா்த்தியின் சகோதரி உப்புபாளையத்தைச் சோ்ந்த கோகிலா அளித்த புகாரின்பேரில், விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநா் முத்துவேல் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.