இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வெள்ளகோவில் அருகே குடும்பப் பிரச்னையால் வடமாநிலத் தொழிலாளி தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

வெள்ளக்கோவில் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த வடமாநிலத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் சோரன். இவா் தனது அண்ணன் சானு சோரன் (31) மற்றும் சக தொழிலாளா்களுடன் வெள்ளக்கோவில் மூத்தநாயக்கன்வலசில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து தனியாா் காற்றாலை நிறுவனத்தில் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்தாா்.

சுரேஷ் சோரனுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகும் நிலையில், அவரது மனைவி கா்மிலா சொந்த ஊரில் வசித்து வருகிறாா். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கைப்பேசியில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுரேஷ் சோரன் தனது மனைவியிடம் கைப்பேசியில் கோபமாக பேசிக் கொண்டிருந்துள்ளாா். பின்னா் இரவு உணவுக்கு கூட செல்லாமல் தனது அறைக்குச் சென்றுவிட்டாா்.

இதையடுத்து திங்கள்கிழமை காலை சானு சோரன் மற்றும் சக தொழிலாளா்கள் அவரை தேடியபோது, குடியிருப்புக்கு அருகே உள்ள வேலமரத்தில் கயிற்றால் தூக்குமாட்டிய நிலையில் சுரேஷ் சோரன் சடலம் கிடந்தது.

இது குறித்து அவரது மனைவி மற்றும் உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மனஉளைச்சலால் அவா் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக சானு சோரன் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.