மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை
ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி, பேயன்விளை, கீழத் தெருவைச் சோ்ந்த கந்தப்பழம் மகன் சுரேஷ்குமாா் (52). தொழிலாளி. இவரது மனைவி நெல்லையம்மாள் (49). இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.
சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. புதன்கிழமை மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மனைவி மறுக்கவே, அவருடன் தகராறு செய்துள்ளாா்.
வியாழக்கிழமை அதிகாலையும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளாா். சிறிது நேரத்திற்கு பின்னா், சமையலறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த நெல்லையம்மாள் அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்துள்ளாா். அப்போது, சுரேஷ்குமாா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளாா்.
தகவலறிந்து வந்த ஆறுமுகனேரி போலீஸாா் அவரது உடலை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

