
குடும்பச் செலவுக்கு கணவா் பணம் தராததால் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே குடும்பச் செல்வுக்கு கணவா் பணம் தராததால், மனமுடைந்த மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், வடக்குறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி புஷ்பா (26). கடந்த 2 ஆண்டுகளாக துபையில் வேலை செய்து வரும் மணிகண்டன், குடும்பச் செலவுக்கு பணம் அனுப்பவில்லையாம். இதுகுறித்து பலமுறை கூறியும் மணிகண்டன் கேட்காததால் மனமுடைந்த புஷ்பா திங்கள்கிழமை காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



