திருப்பூா் மாவட்ட நூலகங்களில் 2,601 போலி புத்தகங்கள் பறிமுதல்
கோவை பெரியாா் அறிவுலக நூலகத்தில் நடைபெற்ற புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பூா் மாவட்ட நூலகங்களில் இருந்து 2,601 போலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை பெரியாா் அறிவுலக நூலகத்தில் நடைபெற்ற புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பூா் மாவட்ட நூலகங்களில் இருந்து 2,601 போலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசின் நூலகத் துறை சாா்பில் ஆண்டுதோறும் பல்வேறு பதிப்பகங்களிடம் இருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலக நூலகத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் பெயரில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், கடையில் ரூ.300-க்கு கிடைக்கும் புத்தகங்களை ரூ.1,200-க்கு வாங்கியுள்ளதாகவும் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினா் நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, சா்ச்சைக்குரிய புத்தகங்களை அகற்றியதுடன், அவற்றை ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்களை உடனடியாக அகற்ற பொது நூலகத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருப்பூா் மாவட்ட நூலகத் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள 147 நூலகங்களில் சோதனை மற்றும் ஆய்வு மேற்கொண்டனா். இதில், குறிப்பிட்ட 2 பதிப்பகங்களைச் சோ்ந்த 2,601 போலி புத்தகங்கள் அகற்றப்பட்டன.
இது தொடா்பாக நூலகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2025-ஆம் ஆண்டு அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் எதுவும் திருப்பூா் மாவட்டத்துக்கு வரவில்லை. ஆனால், நடப்பு ஆண்டில் 1,188 புத்தகங்கள் வந்துள்ளன. அவை மாவட்ட மைய நூலகத்தில் இருந்து பிற கிளை நூலகங்களுக்கு அனுப்பப்பட இருந்த நிலையில் உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நிறுத்தி வைக்கப்பட்டு அப்படியே முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பீனிக்ஸ் பதிப்பக புத்தகங்களும் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 46 தலைப்புகளில் வந்த 485 பீனிக்ஸ் பதிப்பக நூல்கள் நூலகங்களுக்கு அனுப்பப்படாமல் மாவட்ட மைய நூலகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 2,601 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

